1. Home
  2. தமிழ்நாடு

கொண்டாட்டத்தில் திமுகவினர்..! முதல் முறையாக அதிக வாக்கு வித்தியாசம்!

1

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் ஆளாக வேட்பாளரை களம் இறக்கிய திமுக பிரச்சாரத்தை முன்னதாகவே தொடங்கியது.

அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்தது. இதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டபோது, விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்கிய சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி உறுதியாகி இருக்கிறது.மேலும், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல்களிலேயே முதல் முறையாக மிக மிக அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கட்சி என்ற இமாலய சரித்திரத்தையும் திமுக எழுதி இருக்கிறது.

புதியதாக உருவான விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இதுவரை மொத்தம் 5 தேர்தல்களை எதிர்கொண்டது. 2011-ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் சிபிஎம் கட்சியின் ராமமூர்த்தி வெற்றி பெற்றார். திமுகவின் ராதாமணியை 14,897 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் சிபிஎம் ராமமூர்த்தி.

2016-ம் ஆண்டு விக்கிரவாண்டி தேர்தலில் திமுகவின் ராதாமணி, அதிமுகவின் ஆர்.வேலுவை 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2019-ல் ராதாமணி காலமான நிலையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுகவின் முத்தமிழ்ச் செல்வம், திமுகவின் புகழேந்தியை 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முதல் முறையாக மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வென்றது.

2021-ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் நா.புகழேந்தி, அதிமுகவின் முத்தமிழ்ச் செல்வத்தை 9,573 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்தார். கடந்த சில மாதங்களுக்கு நா. புகழேந்தி காலமானதால் தற்போது விக்கிரவாண்டி தொகுதி 2-வது முறை இடைத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது 

Trending News

Latest News

You May Like