திமுக அரசு சிறப்பான முறையில் ஆட்சி செய்கிறது... நடிகர் எஸ்.வி.சேகர் சரவெடி..!

 | 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு எஸ்.வி. சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

திமுக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை வைக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனா தொற்றுநோய் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இதுபோன்று சமயத்தில் மக்களை காப்பாற்றுவதில் மட்டும் தான் முழு கவனத்தை செலுத்த முடியும். எல்லா துறைகளிலும் 100 சதவீதம் கவனத்தை செலுத்த முடியாது. ஒரு சமயத்தில், ஒரு வேலை மட்டும் தான் பார்க்க முடியும், அது யாராக இருந்தாலும் சரி.

அதையும் காலையில் எழுந்தவுடனேயே விமர்சித்து கொண்டியிருந்தால் வெற்று அரசியலாக தான் இருக்கும் .ஒரு உன்னத நோக்கத்துடன் செயல்படும் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசை எப்படி விமர்சனம் செய்ய முடியும். தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP