1. Home
  2. தமிழ்நாடு

திமுக ஆட்சி கலைக்கப்படலாம் - புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி..!

1

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி கூறியதாவது:பூர்வீக பட்டியல் மற்றும் ஆதி திராவிட மக்களுக்கு வழங்க வேண்டிய உள் ஒதுக்கீட்டை ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் பயன்களை பெற்று வருகிறார்கள்.

அதாவது தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வேறு ஒரு பிரிவினருக்கு தற்போதைய திமுக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அதிமுகவும் திமுகவும் பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.
 

தமிழகத்தில் ஏறக்குறைய 20 மாவட்டங்களில் வாழக் கூடிய தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டையும் வட தமிழகத்தில் வாழும் பட்டியலின மக்களுக்கான 18% இட ஒதுக்கீட்டையும் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் ஆந்திராவை சேர்ந்த ஆதி ஆந்திரர்களுக்கும் கடந்த 15 ஆண்டுகளாக 18% இட ஒதுக்கீடும் வழங்கக் கூடிய அநீதி நடைபெறுகிறது.

இந்த 3 சதவீதத்தைத்தான் பிரித்து கொடுத்து விடுங்கள் என தமிழக அரசுக்கு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் திமுகவும் அதிமுகவும் இதை செய்யவில்லை. இதை கண்டித்து விரைவில் மாநில அளவில் போராட்டம் நடத்த போகிறோம். மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அங்குள்ள மலைவாழ் மக்களை அந்த மலையை விட்டு வெளியேற்றுவது சரியல்ல.

ஒரு மொழியை கற்கக் கூடாது என கூறுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரமே கிிடையாது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில்தான் மாநில கல்விக் கொள்கையும் வகுக்கப்பட வேண்டும். இங்கு எந்தவிதமான மொழித் திணிப்பும் இல்லை. ஜாதி, மதம், இனம் , மொழி ரீதியில் வேறுபாடு காட்டக் கூடாது. மும்மொழி எனக் கூறுவது ஏழை, எளிய மக்கள் பயிலக் கூடிய அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம்தான் திமுகவினர் திணிக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் படிக்கும் பள்ளி பற்றி இவர்கள் கூறுவது இல்லை. ஏழை மக்களின் குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்க மறுப்பது எந்த விபத்தில் நியாயம், தர்மம்! இந்தியை யாரும் திணிப்பதில்லை. மத்திய அரசு பாடத் திட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மட்டும்தான் மாணவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு இந்தி கிடையாது. இதை திமுக, அரசு பள்ளி மாணவர்களுக்கு தட்டிப் பறிப்பது சட்டவிரோதம்.

பல மொழிகளை கற்றுக் கொடுப்பதன் மூலம் தான் வாய்ப்புகள் நிறையக் கிடைக்கும். திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால் திமுக அரசை கலைக்கக் கூடிய சூழல் ஏற்படலாம்.

இதே நிலை நீடித்தால் திமுக 2026 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்காது என நான் நினைக்கிறேன். மும்மொழிக் கொள்கையை எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பதும் தவறு. ஏழை குழந்தைகளின் வாழ்க்கையோடு திமுக விளையாடக் கூடாது. இதனால்தான் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தின் பங்கு குறைகிறது. கல்வியை வைத்து திமுக சித்து விளையாட்டு விளையாடக் கூடாது. இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like