1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க. அரசு தனது செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது : நயினார் நாகேந்திரன்

1

சென்னையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பிறகு பா.ஜ.க. உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது, 

உயர்கல்வியில் தமிழகத்துக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் கவர்னர் ஆர்.என். ரவி குறித்து தரக்குறைவாக பேசுகின்றனர். இது வருந்தத்தக்கது. வேதனைக்குரியது. தி.மு.க. தன்னுடைய செல்வாக்கை இழந்து கொண்டே செல்கிறது. சிறப்புக் கூட்டத்துக்கான அவசியம் இருப்பதாக தெரியவில்லை. 

தமிழகத்தில் மக்கள் பிரச்னை ஏராளம் உள்ளது. மின்கட்டண உயர்வு அதிகரித்துள்ளது. வீட்டு வரி உயர்வு 100 மடங்கு கூடியுள்ளது.  இவை அனைத்தும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். பட்டியலின மக்களுக்கு தாக்குதலும் அச்சுறுத்தலும் அதிகரிக்கிறது. இதை மறைப்பதற்காக கவர்னர் விவகாரத்தை தி.மு.க. கையில் எடுக்கிறது.  

வேந்தர் பதவியில் முதல்வர்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். இவை அவசியம்தானா? நாட்டில் வேறு பிரச்னைகள் இல்லையா? மக்கள் பிரச்னையை மையப்படுத்தாமல், கவர்னரின் நடவடிக்கையை மையப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

Trending News

Latest News

You May Like