1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க. பொதுக்குழுவில் 27 தீர்மானம்..! நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

Q

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
* கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும்.
* முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு
* இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு
* உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம் என வலியுறுத்தி தீர்மானம்.
* தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் அரசுக்கு பாராட்டு
* ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைத் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம் என வலியுறுத்தி தீர்மானம்.
* தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதல்வர் பணி தொடரத் துணை நிற்போம் என வலியுறுத்தி தீர்மானம்
* ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.
* தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம்
* தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் ஹிந்தித் திணிப்பைக் கைவிட வலியுறுத்தி தீர்மானம்.
* கீழடி ஆய்வை மறுக்கும் மத்திய பா.ஜ., அரசுக்கு கண்டனம்
* ரயில்வே திட்டங்களில் தமிழகத்தை புறக்கணிக்கும் பா.ஜ., அரசுக்கு கண்டனம்
* சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம்.
*விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ., அரசுக்குக் கண்டனம்
* ஜாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும், முறையாகவும் நடத்த வலியுறுத்தி தீர்மானம்
* தமிழகத்தின் பார்லிமென்ட் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது என்ன வலியுறுத்தி தீர்மானம்.
* கவர்னரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு
* துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சனத்திற்கு கண்டனம்
* அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ., அரசுக்குக் கண்டனம்
* உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைக்க வலியுறுத்தி தீர்மானம்
* எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகிய தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம் என வலியுறுத்தி தீர்மானம்.
* அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வரவேற்பு
* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம் என்ன வலியுறுத்தி தீர்மானம்.
தி.மு.க., பொதுக்குழுவில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு உள்ளன.

Trending News

Latest News

You May Like