2026 தேர்தலுக்கு திமுக 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த திமுக..!
மக்களவை தேர்தலில் 40க்கு 40 என்ற முழுமையான வெற்றியை திமுக பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையிலான பணிகளை தற்போது முடுக்கிவிட்டிருக்கிறது திமுக.
அதன்படி, திமுகவில் மேற்கொள்ளவுள்ள மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை தலைமைக்கு பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை திமுக அமைத்துள்ளது. அதன்படி, இக்குழுவில் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் தங்கம் தென்னரசு ஆகிய 5 பேர் இக்குழுவின் இடம்பெற்றுள்ளனர்