1. Home
  2. தமிழ்நாடு

சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

Q

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேசன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த புகாரில், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீமான் மீது திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, சீமான் மீது வழக்கு பதிவு செய்து, அவர் கைது செய்யவும் வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like