அமைச்சர் பொன்முடி மீது பரபரப்பு புகார் - கலக்கத்தில் திமுக!

அமைச்சர் பொன்முடி பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக விலைமாதர் என்று கூறிப்பிட்டு சைவம், வைணவம் குறித்து சிறிய கதை கூறினார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில்அக்கட்சியை சேர்ந்த திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு என்பது எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது போன்று தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் அவரை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக இதுவரை எந்த ஒரு முடிவும் திமுக தலைமையில் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து தான் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீது பாஜக மாநில செயலாளர் ஏ. அஷ்வத்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் .அமைச்சர் பொன்முடி சைவம், வைணவம் பின்பற்றுவர்களையும் பெண்களையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். மேலும் அவர் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பட்டை , திருநாமம் அணிதல் போன்ற செய்கையாக காண்பித்து பேசியுள்ளார். இது இந்து தர்மத்திற்கு எதிரானது . மேலும் வேண்டும் என்றே ஒரு பிரிவினரினை புண்படுத்தும் நோக்கத்தில் உள்ளது. இதனால் இரண்டு பிரிவுகளுக்கு இடையே பகையை தூண்டும் வகையில் அவரது பேச்சு அமைந்து உள்ளது.
எனவே உடனடியாக அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.