திமுக நிர்வாகி வெட்டி படுகொலை.. சினிமா பாணியில் திட்டமிட்டு கும்பல் வெறிச்செயல் !

நெல்லை மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்தவா் முத்துராமன் (35). இவா், திமுகவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தாா்.
தற்போது குடும்பத்துடன் வள்ளியூரில் வசித்து வரும் இவர் நேற்றிரவு தனது உறவினரை தெற்கு வள்ளியூரில் கொண்டு காரில் விட்டுள்ளார். பின்னர் காரில் திரும்பும் போது ஒரு கும்பல் அவரை வெட்டி சாய்தது.
தெற்கு வள்ளியூர் ரேசன் கடை அருகே சாலையில் மண்ணெண்ணை பேரல்களை போட்டுவிட்டு ஒரு கும்பல் காத்திருந்துள்ளது. காரில் வந்த அவர் பேரல்களை அப்புறப்படுத்த கிழே இறங்கினார்.
உடனே அவரை சூழ்ந்துகொண்ட அக்கும்பல் கத்தி, அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது. அவரது அலறல் சத்தம்கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மக்கள் வருவதை கண்ட கொலை செய்த கும்பல் தப்பியோடியது.
இதையடுத்து முத்துராமனை மீட்டு நாகர்கோவில் மருத்துவமனைக்கு கொண்டுசென்றப்போதும் அவர் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
மேலும் கொலைக்கு காரணமான முக்கிய நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in