திமுகவுக்கு சனாதனம் வேண்டாம்... ரூ.1,000 திட்டம் தொடங்க மட்டும் அமாவாசை வேண்டுமா?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டார். அப்போது கட்சியினர், அவருக்கு மலர் தூவி மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதன்பின் கட்சி நிவாகிகளும், அங்கிருந்த மாணவர்களும் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து ஆத்துமேட்டைல் திறந்தவெளி வாகனத்தில் நின்று பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜகவில் இணையுமாறு அமலாக்கத்துறை நிர்பந்தித்ததாக பொய் சொல்கிறார்கள். ஜாமீன் வேண்டும் என்றால் உங்கள் பிரச்சனையை சொல்லி கேளுங்கள். அமைச்சர் செந்தில்பாலாஜி இணையாத கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான். செப்டம்பர் 15 ஆம் தேதிதான் மகளிர் உரிமைத்திட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தனர். ஆனால் 14 ஆம் தேதியே அனைவரது வங்கி கணக்கிலும் போட்டுவிட்டனர். கேட்டால் அன்று தான் நிறைந்த அமாவாசை என்று சொல்கிறார்கள். திமுகவுக்கு சனாதனம் வேண்டாம், ஆனால் ரூ.1,000 திட்டம் தொடங்க மட்டும் அமாவாசை வேண்டுமா? கடவுள் வேண்டாம், கோயில் உண்டியல் மட்டும் வேண்டும்?
வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும். திமுக ஆட்சியில் எவ்விதம் மாற்றமும் ஏற்படவில்லை. திமுக ஆட்சியை அரசியலில் இருந்து தூக்கிய எறியப்பட வேண்டும். திமுகவின் வருமானத்திற்காக மட்டுமே தமிழ்நாட்டில் டாஸ்மாக் உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது ஏழை மக்கள் தான்” என்றார்.