இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 8 நாட்களாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்று, தமிழகம் திரும்பியுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் 12 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன். திமுக முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.