1. Home
  2. தமிழ்நாடு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு..!

1

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும்தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுகவின் ஆக்கப் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஒரு வருடம் மிகவும் முக்கியமானது என்பதால், அதனை எப்படி திட்டமிட வேண்டும் என்பது தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. வீடு தோறும் அரசின் திட்டங்களை எப்படி எடுத்துச் செல்வது என்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனைகள் வழங்க உள்ளார்.

அமைச்சரவை மாற்றம் நேற்று நிகழ்ந்த நிலையில் பொன்முடி, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளனர். இதுதொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அதுதொடர்பாக அமைச்சர்கள் பேசுவது சர்ச்சையாகி எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே, திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம், ஊடகங்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்படலாம்.


திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதற்காக அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. மேலும் பாமக, தேமுதிக உள்பட சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. அதேபோல அமலாக்கத் துறை ரெய்டுகள் மூலம் திமுகவுக்கு பாஜக நெருக்கடிகளை தந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனை எப்படி எதிர்கொள்வது என்பதும் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. அதாவது முழுக்க முழுக்க எப்படி 2026 தேர்தலை எதிர்கொள்வது என்பது தொடர்பாகவே இந்த கூட்டம் இருக்கப் போகிறது.

Trending News

Latest News

You May Like