1. Home
  2. தமிழ்நாடு

திமுக கவுன்சிலர் மாரடைப்பால் மரணம்..!

1

தமிழ்நாடு முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 5 வது நினைவு தினம் அமைதி பேரணி சென்னையில் நடைபெற்றது.

அமைதிப் பேரணி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலைஞர் சிலையில் இருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை நடைபெற்றது.

இதில், இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, செஞ்சி மஸ்தான் மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை உறுப்பினர்கள் ஆ.ராசா, கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த பேரணியில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சியின் 146 வார்டு மாமன்ற உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம் இன்று ( ஆகஸ்ட் 7) திடீரென மயங்கி விழுந்தார். பின்னர், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சண்முகம் மரணமடைந்தார்.

இது அமைதி பேரணியில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like