வரும் டிச.18-ம் தேதி நடைபெறவிருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/6c8c7c8fd9cc099733de3f0601994b2e.webp?width=836&height=470&resizemode=4)
வரும் டிச.18-ம் தேதி நடைபெறவிருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், டிச.18-ம் தேதியன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னையில் வரும் டிச.18-ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.