சென்னையில் நடைபெற இருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு..!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் டிச.18ம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறும். இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும், என்று அறிவிக்கப்பட்டிருந்தது .
இக்கூட்டத்தில், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கையாலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும் திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.