1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் தி.மு.க அழைப்பு..!

1

பாராளுமன்ற  தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க.,விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

இதில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ள தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 21 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை  முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிடுகிறார். 

இதைத் தொடர்ந்து தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் இன்றே வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  இதனிடையே, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது. 

அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு இந்தக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like