1. Home
  2. தமிழ்நாடு

விசிகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கியது திமுக..!

1

திமுக கூட்டணியில் விசிக 1 பொதுத்தொகுதி உட்பட 4 தொகுதிகள் கேட்ட நிலையில் 2 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒதுக்கிய இரண்டு தொகுதியிலும், தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் விழுப்புரத்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொகுதிகளை பகிர்ந்து கொண்டோம், அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே 2 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும், ஆந்திரா, கேரளா ஆகிய 2 மாநிலங்களில் பானைச் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி விண்ணப்பம் அளித்துள்ளதாகக் கூறினார்.

திமுக கூட்டணியில் இதுவரை ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி, விசிகவுக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வருவதால் தான், இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தொகுதி பங்கீடு இறுதியாகாவில்லை என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like