1. Home
  2. தமிழ்நாடு

திமுக - அதிமுக 18 இடங்களில் நேரடி மோதல்..!

1

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் விளங்வங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக். கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் ஆதரவு அளித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில் ஒரு வழியாக கூட்டணி இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கதிரவன் பிரிவினர் தற்போது ஆதரித்து வருகின்றனர்,

திமுக - அதிமுக உள்ளிட்ட இரண்டு கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தொகுதி வேட்பாளர்கள் பெயரை அறிவித்து விட்டது. இந்நிலையில், இந்த தேர்தலில், 8 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன. அதன் விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

திமுக அதிமுக நேரடி போட்டி:

**தொகுதி திமுக அதிமுக **

மக்களவை தேர்தல் : திமுக அதிமுக நேரடி மோதல்

தொகுதிகள் அதிமுக திமுக

  1. வடசென்னை ராயபுரம் மனோ கலாநிதி வீராசாமி

  2. தென்சென்னை ஜெ.ஜெயவர்தன் தமிழச்சிதங்கபாண்டியன்

  3. ஸ்ரீ பெரும்புதூர் பிரேம்குமார் டி.ஆர். பாலு

  4. காஞ்சிபுரம் ராஜசேகர் செல்வம்

5.அரக்கோணம் விஜயன் ஜெகத்ரட்சன்

  1. திருவண்ணாமலை கலியபெருமாள் சி.என்.அண்ணாதுரை

  2. வேலூர் பசுபதி கதிர் ஆனந்த்

  3. தருமபுரி அசோகன் ஆ. மணி

  4. பெரம்பலூர் சந்திரமோகன் அருண் நேரு

  5. கள்ளக்குறிச்சி குமரகுரு மலையரசன்

  6. தேனி நாராயணசாமி தங்க தமிழ்ச்செல்வன்

  7. சேலம் விக்னேஷ் செல்வகணபதி

  8. ஈரோடு ஆற்றல் அசோக்குமார் பிரகாஷ்

  9. நீலகிரி லோகேஷ் ஆ.ராசா

  10. தூத்துக்குடி சிவசாமி வேலுமணி கனிமொழி

  11. கோவை சிங்கை ராமச்சந்திரன் கணபதி ராஜ்குமார்

  12. ஆரணி கஜேந்திரன் தரணி வேந்தன்

  13. பொள்ளாச்சி கார்த்திகேயன் ஈஸ்வரசாமி

சில தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே களத்தில் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மோதிக் கொள்கின்றன. 

Trending News

Latest News

You May Like