1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க.-அ.தி.மு.க. நேருக்கு நேர் மோதும் 18 தொகுதிகள் விவரம்..!

1

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமை வகிக்கும் இந்தியா கூட்டணியில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), கோவை, தூத்துக்குடி உள்பட 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.  இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இதே போல்,  அ.தி.மு.க. கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகளும் , எஸ்டிபிஐ கட்சிக்கு 1 தொகுதியும்,  புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.  முன்னதாக,நேற்று முன்தினம் (மார்ச் – 20 ) அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து அ.தி.மு.க.வின் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று(மார்ச் – 21 ) 17 பேர் கொண்ட அ.தி.மு.க. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதையடுத்து, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகள் நேருக்கு நேர் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்  வருமாறு:

1) தென் சென்னை

தமிழ்ச்சி தங்கபாண்டியன் – தி.மு.க.

ஜெ.ஜெயவர்தன் – அ.தி.மு.க.

2) வட சென்னை

கலாநிதி வீராசாமி – தி.மு.க.

ராயபுரம் மனோ – அ.தி.மு.க.

3) ஸ்ரீபெரும்புதூர்

டி ஆர் பாலு – தி.மு.க.

பிரேம் குமார் – அ.தி.மு.க.

4) காஞ்சிபுரம் (தனி)

செல்வம் – தி.மு.க.

ராஜசேகர் – அ.தி.மு.க.

5) அரக்கோணம்

ஜெகத்ரட்சகன் – தி.மு.க.

A.L.விஜயன் – அ.தி.மு.க.

6) வேலூர்

கதிர் ஆனந்த் – தி.மு.க.

பசுபதி – அ.தி.மு.க.

7) தருமபுரி

அ.மணி – தி.மு.க.

டாக்டர் அசோகன் – அ.தி.மு.க.

8) திருவண்ணாமலை

சி என் அண்ணாதுரை – தி.மு.க.

எம் கலியபெருமாள் – அ.தி.மு.க.

9) ஆரணி

தரணி வேந்தன் – தி.மு.க.

கஜேந்திரன் – அ.தி.மு.க.

10) கள்ளக்குறிச்சி

மலையரசன் – தி.மு.க.

ரா. குமரகுரு – அ.தி.மு.க.

11) சேலம்

செல்வ கணபதி – தி.மு.க.

P.விக்னேஷ் – அ.தி.மு.க.

12) ஈரோடு

பிரகாஷ் – தி.மு.க.

ஆற்றல் அசோக்குமார் – அ.தி.மு.க.

13) நீலகிரி (தனி)

ஆ ராசா – தி.மு.க.

லோகேஷ் தமிழ்ச்செல்வன் – அ.தி.மு.க.

14) கோயம்புத்தூர்

கணபதி ராஜ்குமார் – தி.மு.க.

சிங்கை ராமச்சந்திரன் – அ.தி.மு.க.

15) பொள்ளாச்சி

கே ஈஸ்வரசாமி – தி.மு.க.

அப்புசாமி என்ற கார்த்திகேயன் – அ.தி.மு.க.

16) பெரம்பலூர்

அருண் நேரு – தி.மு.க.

சந்திரமோகன் – அ.தி.மு.க.

17) தேனி

தங்கத் தமிழ்செல்வன் – தி.மு.க.

நாராயணசாமி –  அ.தி.மு.க.

18) தூத்துக்குடி

கனிமொழி கருணாநிதி – தி.மு.க.

சிவசாமி வேலுமணி  – அ.தி.மு.க.

Trending News

Latest News

You May Like