திமுக -அதிமுக கவுன்சிலர்கள் திடீர் மோதல்..!

சேலம் மாநகராட்சி கூட்டம் இன்று (மே 29) நடைபெற்றது.
அப்போது, அதிமுக கவுன்சிலர் யாதவ மூர்த்தி பேச முயன்றபோது, திமுக கவுன்சிலர் சுகாசினி குறுக்கிட்டதால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது, திமுக-அதிமுக கட்சிகளின் கவுன்சிலர்களிடையே பெரிய வாக்கு வாதமாக மாறியது.
இதில், இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதுடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் சுகாசினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.