1. Home
  2. தமிழ்நாடு

வருகிற 6-ந்தேதி பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்..!

1

பிரேமலதா வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மக்கள் பிரச்சனைக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Trending News

Latest News

You May Like