1. Home
  2. தமிழ்நாடு

இனி தேமுதிக அலுவலகம் "கேப்டன் ஆலயம்" என அழைக்கப்படும் - பிரேமலதா!​​​​​​​​​​​​​​

1

தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது . இதையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, பேனா மற்றும் மக்களுக்கு இனிப்புகளை அக்கட்சியின் நிர்வாகிகள் வழங்கினர்.

இந்த நிலையில், மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, தேமுதிக தலைமை அலுவகலத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் விஜயகாந்தின் முழு உருவ வெண்கல சிலையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார்.

பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தேமுதிக தலைமை அலுவலகம் இனி “கேப்டன் ஆலயம்” என்று அழைக்கப்படும். புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like