1. Home
  2. தமிழ்நாடு

வரும் 7-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

1

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், பிப்ரவரி 7ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, யாருடன் கூட்டணி என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


 

Trending News

Latest News

You May Like