தீபாவளியன்று நடந்த சோகம் : பட்டாசு வெடித்து 4 வயது குழந்தை உயிரிழப்பு..!

தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகளை உடுத்தி தீபாவளி பண்டியை கொண்டாடினர்.பட்டாசுகளை வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கத்தில் பட்டாசு வெடித்து 4 வயது குழந்தை உயிரிழந்தார். ரமேஷ் என்பவரின் 4 வயது மகள் நவிஷ்கா பட்டாசு வெடித்தபோது படுகாயமடைந்து உயிரிழந்தார். முன்னதாக படுகாயமடைந்த நவிஷ்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.