1. Home
  2. தமிழ்நாடு

தீபாவளி சிறப்பு தொகுப்பு... என்னென்ன பொருட்கள் உள்ளது தெரியுமா ?

1

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை வருகின்ற 28.10.2024 முதல் நடைபெறவுள்ளது.
 

இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு, பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பிரீமியம் (Premium) - தொகுப்பில் துவரம்பருப்பு-200கிராம், உளுத்தம்பருப்பு-200கிராம், கடலைபருப்பு-200கிராம், வறுகடலை (குண்டு) -100கிராம், மிளகு-25கிராம், சீரகம்-25கிராம், வெந்தயம்-50கிராம், கடுகு-50கிராம், சோம்பு-50கிராம், நீட்டு மிளகாய்-100கிராம், தனியா-100கிராம், புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.199/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், எலைட் (Elite) - தொகுப்பில் துவரம்பருப்பு-250கிராம், உளுத்தம்பருப்பு-250கிராம், கடலைபருப்பு-250கிராம், வறுகடலை (குண்டு) -200கிராம், மிளகு-50கிராம், சீரகம்-50கிராம், வெந்தயம்-50கிராம், கடுகு-50கிராம், சோம்பு-50கிராம், நீட்டு மிளகாய்-250கிராம், தனியா-200கிராம், புளி-100கிராம், ரவை-100கிராம், ஏலக்காய்-5கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.299/- என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Trending News

Latest News

You May Like