1. Home
  2. தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை : ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்..!

1

சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் பயணத்தை அதிகம் விரும்புகிறார்கள். பஸ் கட்டணத்தை விட செலவு குறைவு மற்றும் குறித்த நேரத்திற்கான பயணம் என்பதால் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். 

அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அக்டோபர் 28, 29, 30-ம் தேதிகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிடுவார்கள். ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. 

இதனால் அக்டோபர் 28-ம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதையடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு வேகமாக முடிந்தது. 

பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தனர். இதேபோல் அக்டோபர் 29-ம் தேதி பயணம் செய்பவர்கள் இன்றும், அக்டோபர் 30-ம் தேதி பயணம் செய்பவர்கள் நாளையும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

தீபாவளி பண்டிகை முன்பதிவுகளை வைத்து சிறப்பு ரயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து ரயில்வே முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Trending News

Latest News

You May Like