1. Home
  2. தமிழ்நாடு

சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜிற்கு திமுகவில் முக்கிய பொறுப்பு..!

Q

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக திவ்யா சத்யராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவராக டி.பி.எம்.மைதீன் கான் (பாளையங்கோட்டை திருநெல்வேலி), துணைத் தலைவராக வி.ஜோசப்ராஜ், துணைச் செயலாளராக கே.அன்வர் அலி (100/எஃப்/65வது கிராஸ், ராமலிங்க நகர், உறையூர், திருச்சி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுக வர்த்தகர் அணி துணைச் செயலாளராக குள்ளம் ராஜேந்திரன் (பெரம்பலூர்),கே.வி.எஸ்.சனவாசன (கிருஷ்ணகிரி), செய்தித் தொடர்பு துணைச் செயலாளராக சூர்யா கிருஷ்ணமூர்த்தி (சென்னை), தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்களாக திவ்யா சத்யராஜ், பி.எம்.ஸ்ரீதர் (செம்பனார்கோவில், மயிலாடுதுறை மாவட்டம்), பா.ச.பிரபு (மதுரை), கொள்கைப் பரப்பு துணைச் செயலாளராக முனைவர் வே.தமிழ்பிரியா (சிவகங்கை மாவட்டம்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக மருதூர் ஏ.இராமலிங்கம், துணைச் செயலாளராக கொ.ரமேஷ் (தருமபுரி), இலக்கிய அணி துணைச் செயலாளர்களாக சௌமியன் வைத்தியநாதன் (மயிலாடுதுறை), ஜி.நாகநாதன் (கிழக்கு தெரு, எஸ்.கொடிகுளம், பரமகுடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம்), வி.டி.கலைச்செல்வன் (விருத்தாசலம்), கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளராக எம்.எஸ்.ஹரிபாபு (சென்னை), மாணவர் அணி துணைச் செயலாளராக ஜெ.இராமகிருஷ்ணன் (சிவகங்கை), தொண்டர் அணி துணைச் செயலாளராக எஸ்.எம்.கே.அண்ணாதுரை (நுங்கம்பாக்கம், சென்னை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

Trending News

Latest News

You May Like