பிரிந்துசென்ற மனைவி திரும்ப வரவே இல்லை.. மனநலம் பாதித்து கணவர் விபரீத முடிவு !

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆகாசப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு திருமணமான சில காலங்களிலேயே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவியது.
இதனால் அவரிடம் இருந்து மனைவி பிரிந்து சென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. பலமுறை சென்று திரும்ப அழைத்தும் தமிழ்ச்செல்வனுடன் அவரது மனைவி திரும்பி வர மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனைவி பிரிந்த விரக்தியில் இருந்த தமிழ்ச்செல்வன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே இரண்டு முறை கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் 3வது முறையாக ஆகாசம்பட்டி பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
கிணற்றில் விழுந்து தமிழ்ச்செல்வம் தற்கொலை செய்துக்கொண்டதை அறிந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி பிரிந்துசென்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்துவாழ மறுத்து திரும்பி வராததால் கணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in