1. Home
  2. தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் அதிரடி..! ரேஷன் பொருள் வாங்காதவர்கள் கார்டு வகையை மாற்றிக் கொள்ளுங்கள்..!

1

ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையை  வைத்து மாதந்தோறும் பொருட்கள் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் அனுப்பப்படுகின்றன. ஆனால், பலர் வெளியூர்களில் இருக்கும் காரணத்தினாலும், சில பல வேலைகள் காரணமாக முறையாக சென்று ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில்லை. இதனால் அரசு நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பொருட்கள் தேக்க நிலை அடைகிறது. சில இடங்களில் அந்தபொருட்கள் பயன்படுத்தமுடியாத நிலைக்கும் செல்கிறது. இதற்காக அரசு சில கடுமையான அறிவுறுத்தல்களை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கி வருகிறது. தொடர்ச்சியாக பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

அந்த வகையில் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை நீலகரி மாவட்ட ஆட்சியர் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப்பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டைகளுக்கு நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறவிருப்பமில்லை எனில், தங்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக தங்களின் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக (NO COMMODITY CARD) மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அதாவது பொருட்கள் தொடர்ச்சியாக நியாயவிலைக் கடைகளுக்கு சென்று வாங்காதவர்கள், வாங்க முடியாதவர்கள், நியாயவிலைக் கடைபொருட்கள் தேவையில்லை என நினைப்பவர்கள் எல்லோருக்கும் அந்த அறிவிப்பு பொருந்தும். ஒருவேளை உங்களுக்கு ரேஷன் கடை பொருட்கள் தேவையில்லை என்றால் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பொருளில்லா குடும்ப அட்டையாக உங்களின் ரேஷன் கார்டை மாற்றிக் கொள்ளலாம். 

Trending News

Latest News

You May Like