தேர்தல் முடிந்த பின் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் – முதல்வர் அதிரடி!
புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி திருபுவனை தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு முதல்வர் ரங்கசாமி வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய அவர், நமச்சிவாயம் வெற்றி பெற்றால் மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதி கிடைக்கும் என தெரிவித்தார்.
மேலும் தேர்தல் முடிந்தவுடன் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இதுவரை தங்களின் ஆட்சி காலத்தில் சாலைகள் போடப்பட்டு, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவி தொகை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.