கணவருடன் தகராறு.. 2 மகள்களை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்..

மதுரை மேல்வாசல் பகுதியில் தமிழ் செல்வி என்ற பெண் தனது கணவர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். தம்பதியர் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோன்று நேற்றும் கணவர் மனைவியுடன் தகறாரில் ஈடுபட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த தமிழ் செல்வி தனது 2 குழந்தைகளின் உடலுக்கு தீவைத்துள்ளார்.
மேலும் தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர்களின் அலறல் சத்தம்கேட்டு சென்றுபார்த்த உறவினர்கள் மூன்றுபேரும் தீயில் எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களை காப்பாற முயன்றப்போதும் குழந்தைகள் வரணஸ், வர்ணிகா ஸ்ரீ ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்று தீக்குளித்த தமிழ் செல்வியை காயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் உள்ளிடோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள்களுக்கு தீவைத்து எரித்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in