நட்சத்திர விடுதியில் பீர்-க்காக நண்பனுடன் தகராறு.. திருச்சி சிவாவின் மகன் மீது புகார் !
நட்சத்திர விடுதியில் பீர்-க்காக நண்பனுடன் தகராறு.. திருச்சி சிவாவின் மகன் மீது புகார் !

தி.மு.க எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா தனது நண்பரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக சென்னை அண்ணா சாலையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.
பிறந்தநாள் நிகழ்ச்சி எல்லாம் முடிந்த பின்னர் வெளியே வந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, தனது நண்பரான பஜாஜ் நிறுவனத்தின் மண்டல மேலாளரான ஸ்ரீராம் என்பவரைப் பார்த்துள்ளார்.
அதன்பின் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் மீண்டும் மது அருந்தச் சென்றனர். அப்போது வாங்கிய 4 பீருக்கு நண்பன் ஸ்ரீராம் பில் கொடுத்துள்ளார். ஆனால் பணம் பெறும் வங்கியின் மிஷின் சிக்னல் இல்லாததால் இயங்கவில்லை. இதனால் ஊழியரால் பணத்தை எடுக்கமுடியவில்லை.
இதனை வைத்து ஸ்ரீராமை சூர்யா உள்ளிட்டோர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு ஸ்ரீராமுக்கும், சூர்யா மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதில் ஸ்ரீராமை தாக்குவதற்காக சூர்யாவும் அவரது நண்பர்களும் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்து புறப்பட்ட ஸ்ரீராம் 100-க்கு கால் செய்து புகாரளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in