சரக்கடிக்கும் போது தகராறு.. பீர் பாட்டிலால் தலையில் அடித்தே கொலை செய்த நண்பர்கள் !
தமிழகம் - கர்நாடகா எல்லைப்பகுதியாக உள்ளது அத்திப்பள்ளி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள இந்த அத்திப்பள்ளி பகுதியில் ஸ்ரீகாந்த்(25) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவர் நேற்று ஆனேக்கல் அடுத்த அரளி என்கிற இடத்தில் தனது 4 நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்தும்போது போதையில் நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் தகராறு ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இதில் ஸ்ரீதர் மற்றவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து ஸ்ரீகாந்தை பீர் பாட்டிலால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் அப்பகுதியில் சடலம் கிடப்பதை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர், அங்கு விரைந்த போலீசார் சடலத்தை மீண்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் நண்பர்கள் அடித்து கொலை செய்ததை உறுதிப்படுத்தினர். மேலும் கொல்லப்பட்ட ஸ்ரீகாந்த் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன .
எனினும் அவர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் இக்கொடூரத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
newstm.in