ஆடு விற்பதில் தகராறு… கத்தியால் குத்தி குடலை சரித்த வியாபாரி!

கரூர் மாவட்டத்தில் ஆடு விற்பனையின் போது ஏற்பட்ட தகராறினால் ஆத்திரம் அடைந்த வியாபாரி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை அருகே குமாரமங்கலத்தை சேர்ந்த சரவணன் (37) என்பவருக்கும், பங்களாபுதூரை சேர்ந்த ஆட்டு வியாபாரியான மாரியப்பனுக்கும் ஆடு விற்பனை செய்த போது வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஒருவர் மீது ஒருவர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்ததை அடுத்து இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் சரவணம் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மாரியப்பன் அவரது வயிற்றில் கத்தியால் குத்தினார்.
துடிதுடித்துப் போன சரவணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சரவணனுக்கு வயிற்றில் பலத்து காயம் ஏற்பட்டதை அடுத்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து கத்தியால் குத்திய மாரியப்பனை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in