1. Home
  2. தமிழ்நாடு

ஓடும் பஸ்சில் தகராறு... போதை பயணியால் பறிபோன கண்டக்டர் உயிர்..!

1

சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் - நடத்துநனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த மோதலில் பஸ்சில் இருந்து கிழே விழுந்த பஸ் கண்டகர் ஜெகன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை கோயம்பேடு - எம்.கே.பி நகர் இடையே 46 G என்ற வழித்தட எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து ஒன்று சென்னை அரும்பாக்கம் அருகே உள்ள அண்ணா ஆர்ச் அருகே வந்த போது கண்டக்டர் ஜெகன் குமார் என்பவரிடம் பயணி கோவிந்தன் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையில் இருந்த பயணி கோவிந்தன் தகராறில் ஈடுபட்ட போது பேருந்தில் இருந்து கீழே விழுந்த கண்டக்டர் ஜெகன் குமார் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் வந்த கோவிந்தன், மீண்டும் வேலூர் செல்வதற்காக கோயம்பேட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். பேருந்து அண்ணா ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்த போது, அடுத்த ஸ்டேஜ் நெருங்கியதால், டிக்கெட் எடுப்பதற்காக பஸ்சை ஒரமாக நிறுத்த சொல்லியிருக்கிறார் கண்டக்டர் ஜெகன்குமார். அப்போது டிக்கெட் எடுப்பது தொடர்பாக கண்டக்டருக்கும் பயணி கோவிந்தனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலைப்பாக மாறியிருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் பயங்கரமாக அடித்துக் கொண்டனர். பேருந்துக்குள்ளேயே இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. பேருந்தை விட்டு இறங்கி ரோட்டில் நின்றும் சண்டை போட்டுள்ளனர்.

இதில் கோவிந்தன் பிடித்து தள்ளியதில் நடத்துநர் ஜெகன்குமார் கீழே விழுந்த்தாக சொல்லப்படுகிறது. கீழே விழுந்தததில் படுகாயம் அடைந்த ஜெகன குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த அமைந்தகரை போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்தார். உயிரிழந்த அரசுபஸ் கண்டக்டர் ஜெகன் குமாருக்கு வயது 52 ஆகும். இவருக்கு 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். காயம் அடைந்த பயணி கோவிந்தனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியுடன் சண்டை போட்டதில் கீழே விழுந்து காயம் அடைந்த கண்டக்டர் உயிரிழந்த தகவல் மாநகர பேருந்து கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் இடையே காட்டுத்தீ போல பரவியது.

இதனால், பல்வேறு இடங்களிலும் பேருந்துகளை தொடர்ந்து இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தினர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு பேருந்துகளை இயக்க பஸ் ஊழியர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் போக்குவரத்து பாதிப்பு இன்றி வழக்கம் போல ஓடின.

Trending News

Latest News

You May Like