1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு!

1

அதிமுகவை சேர்ந்த முன்னாள் சுகாதாரதுறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமானவர் டாக்டர் விஜயபாஸ்கர். இவரும், இவரது மனைவி ரம்யாவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகையில் ஆவணங்களின் நகல்களை கேட்டு மத்திய அரசின் அமலாக்கத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு கடந்த முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணைக்கு விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். இதேபோல லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஆஜராகினார். அப்போது வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like