1. Home
  2. தமிழ்நாடு

விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி..!

Q

வாக்கு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தனர்.

 

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

அப்போது கூறிய நீதிபதிகள், “தொழில்நுட்ப ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாக அனைத்து வித விசாரணைகளையும் நடத்தினோம். ஆணையத்தைக் கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்ததுடன், 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

EVM- ல் கட்சி சின்னத்துடன் பார் கோர்டு பொருத்துவது குறித்து ஆராய நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்துள்ளார்.

EVM, விவிபேட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணை, ஆலோசனை நடத்தினோம். EVM, விவிபேட் கருவியின் நம்பகத்தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம். EVM- ல் கட்சி சின்னத்துடன் பார்கோடு இணைப்பது குறித்து ஆராய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5% ஒப்புகைச் சீட்டு சரிப்பார்க்கும் முறை தொடர வேண்டும்.

EVM வாக்குகளை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் 100% சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. முடிவுகளை அறிவித்து 45 நாட்களுக்கு இயந்திரங்களை சீல் செய்து வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவில் குளறுபடி என சொல்லி யாராவது அதை சரிபார்க்க விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்தல் முடிவுக்கு பின் இயந்திரத்தை சரிபார்க்க வேட்பாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரே வேளை இயந்திரத்தில் தவறு இருப்பதை கண்டறிந்தால் கட்டணம் திருப்பித் தரப்படும். தேர்தல் நடைமுறையைச் சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழி வகுக்கும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like