‘மாமன்னன்' படத்தை பாராட்டிய இயக்குநர் விக்னேஷ் சிவன்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து நடிகர்கள் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சமூக நீதி குறித்தும், சமத்துவம் குறித்தும் பேசிய இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
இந்த படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது. ஏற்கனவே முதலமைச்சர் முக ஸ்டாலின், நடிகர் கமல் உள்ளிட்டோர் ‘மாமன்னன்’ படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்தை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன்,"மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்!
வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும் முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு sir இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!
உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது.
மாரி செல்வராஜின் @mari_selvaraj கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! #MAAMANNAN
— VigneshShivan (@VigneshShivN) July 5, 2023
வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும்
முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி… pic.twitter.com/ZFhslzy7oK