இயக்குநர் சுசி கணேசனின் மாமனார் சண்முகவேலு காலமானார்..!

2002-ல் வெளியான ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சுசி கணேசன். அதனைத் தொடர்ந்து விரும்புகிறேன், திருட்டுப் பயலே, கந்தசாமி, திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இவரது மனைவி மஞ்சரி காரைக்குடியைச் சேர்ந்தவர். மஞ்சரியின் தந்தை சண்முகவேலு , திண்டுக்கல் மாவட்டத்தில் டெபுடி கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுசி கணேசன் பாலிவுட்டில் படம் பண்ணுவதற்காக தற்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி இருக்கிறார்.
மகளுக்குத் துணையாக சண்முகவேலுவும் மும்பையில் இருந்தார். 85 வயதான சண்முகவேலு வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அண்மையில் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான காரைக்குடியில் நாளை நடைபெற இருக்கிறது. சண்முகவேலு மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.