1. Home
  2. தமிழ்நாடு

பிரபல காமெடி நடிகர் சேஷூ சிகிச்சைக்கு பண உதவி கேட்கும் இயக்குநர்!

Q

விஜய் டிவியில் கடந்த 2003 முதல் 2008 ஆம் ஆண்டு வரை பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியாக லொள்ளு சபா ஒளிப்பரப்பாகி வந்தது. இந்நிகழ்ச்சியில் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்தார் ஷேசு. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிகக் ஆரம்பித்தார். குறிப்பாக லொள்ளு சபா நிகழ்ச்சியில் தன்னுடன் நடித்த சந்தானம் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.

சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான 'ஏ 1' படத்தில் குடித்து விட்டு 'ஐயய்யோ அவரா.. அவரு பெரிய ஆளாச்சேன்னு எல்லாற்றும் பயப்படுவாங்க' என சேஷு பேசும் வசனம் பிரபலமான மீம் மெட்டீரியல். இந்நிலையில் நடிகர் சேஷு உடல்நலக்குறைவு குறைவு காரணாமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த சேஷுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகர் சேஷு விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் பாபு, சேஷூவின் சிகிச்சைக்கு ரசிகர்களிடம் பண உதவி கேட்டு உருக்கமாக டிவீட் செய்துள்ளார். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பண உதவி அளித்து வருகின்றனர்.

கோட்டாக் மகிந்திரா வங்கி

வங்கிக் கணக்கு எண் 9412025212

ஐஎப்எஸ்சி கோடு: KKBK0000431

சேமிப்பு கணக்கு

பெயர் : எல் பாரத்

Trending News

Latest News

You May Like