1. Home
  2. தமிழ்நாடு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு..! ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?

1

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் லியோ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, “விஜய் பேசி டிரெய்லரில் இடம் பெற்ற கெட்டவார்த்தை லியோ திரைப்படத்தில் இடம் பெறாது. ‘லியோ’ படத்தில் ஆபாச வசனம் பேசியது நடிகர் விஜய் அல்ல; கதாபாத்திரம் மட்டுமே. ‘லியோ’ LCU- க்குள் வருமா, வராதா என்பது நாளை (அக்.19) மட்டுமே தெரியும். போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தவே இதுபோன்ற படங்களை எடுக்கிறேன்.

18 வயதுக்கு குறைவானவர்கள் மதுக்கடை முன் நிற்கும் போது, அதை ஏன் யாரும் தடுப்பதில்லை? விஜய் படம் என்றாலே சிறு சிறு பிரச்சனை வருகிறது. படத்தில் இருப்பதை ஆக்ஷன் காட்சிகளாகவே பார்க்கிறேன்; அது வன்முறை அல்ல. தியேட்டரில் இல்லாமல் நாங்களும் படம் இயக்க முடியாது; நாங்கள் இல்லாமல் தியேட்டரும் இல்லை.

70,000 முதல் 80,000 பேர் வரை கூடுவார்கள் என்பதால் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை ரத்துச் செய்தோம். அவ்வளவு பேர் ஒரே இடத்தில் கூடும் போது, அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்பதால் ரத்துச் செய்தோம்” என்றார்.

Trending News

Latest News

You May Like