1. Home
  2. தமிழ்நாடு

உடைந்துபோன இயக்குநர் பாரதிராஜா..! கண்கலங்க வைக்கும் காட்சி..!

1

பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். அய்யோ நம்ம பாரதிராஜா மகன் இப்படி சின்ன வயசுல இறந்துவிட்டாரே என சினிமா ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


மகனை உயிரற்ற உடலாக பார்க்கும் கொடுமை தான் தந்தைக்கு நடக்கும் மிகப் பெரிய கொடுமை ஆகும். அருமை மகனுக்கு இறுதிச் சடங்கு செய்யும் கொடுமையை பாரதிராஜா அனுபவிக்க வேண்டியதாகிவிட்டதே என்பதே பிரபலங்களும், ரசிகர்களும் புலம்புகிறார்கள்.


தாஜ்மஹால் படம் மூலம் தன் செல்ல மகனை கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தார் பாரதிராஜா. அப்பா இயக்கத்தில் மகன் நடித்த தாஜ்மஹால் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. அதன் பிறகு மனோஜ் பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்காமல் போனதால் மனோஜ் மன அழுத்தத்திற்கு ஆளானார்.


இருந்தாலும் தன் மீதான நம்பிக்கையை அவர் கைவிடவில்லை. நான் பாரதிராஜாவின் மகன் என சொல்லவே ரொம்ப பெருமைப்பட்டவர் மனோஜ்.



 

Trending News

Latest News

You May Like