1. Home
  2. தமிழ்நாடு

இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி!

பாரதிராஜா

தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் முன்னணி இயக்குநரான பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 80 வயதைக் கடந்த இயக்குநர் பாரதிராஜா, வயது முதிர்வு மற்றும் அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவு காரணமாகத் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை அவர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாரதிராஜா

இது குறித்து வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, “ இது ஒரு தீவிரமான உடல்நலக் குறைவு அல்ல. வயது முதிர்வு காரணமாக மேற்கொள்ளப்படும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மட்டுமே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது மிகவும் சீராகவும், நலமாகவும் இருப்பதாகவும், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் தொற்று காரணமாக அவர் தீவிர சிகிச்சை பெற்று மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like