1. Home
  2. தமிழ்நாடு

சொகுசு கார் வாங்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்... விலை எவ்வளவு தெரியுமா ?

1

 கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் இயக்குநர் முருகதாஸ். அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகினார். தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த ரமணா படதை இயக்கினார். இப்படம் கோலிவுட் திரையுலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. முதல் படத்திலேயே கோலிருட்டில் முத்திரை பதித்தார் இயக்குநர் முருகதாஸ்.

இதைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து கஜினி, தெலுங்கில் ஸ்டாலின், இந்தியில் கஜினி படங்களை இயக்கினார். இதையடுத்து, சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஏழாம் அறிவு திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கினார். இது விஜய்யின் திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அடுத்து இந்தியில் துப்பாக்கி படத்தின் ரீமேக்கை இயக்கினார். கத்தி, அகிரா, ஸ்பைடர், சர்கார் படங்களை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இறுதியாக ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்கினார்.

தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய பி.எம்.டபிள்யூ காரை வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் ஆகும். காரை வாங்கிய பின் குடும்பத்தினருடன் சேர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like