1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்..!

1

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய முதல், 17 ஆண்டுகள் விளையாடிய வீரர்களில் 38 வயதான தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். மொத்தம் 257 போட்டிகளில் ஆடி 4,842 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 22 அரை சதங்கள் அடக்கம். நடப்பு சீசனில் 15 போட்டிகளில் ஆடி 326 ரன்களை சேர்த்த அவர், மீண்டும் ஒரு முறை ஆர்சிபி-க்கு ஃபினிஷராக செயல்பட்டார்.

விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், தனது இளம் வயது முதல் ரஞ்சி கோப்பை போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளார். 2004இல் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 14 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், பின்னர் அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்தார். தோனியின் வருகைக்கு பிறகு தினேஷ் கார்த்திக் பல்வேறு தொடர்களில் கூடுதல் விக்கெட் கீப்பராக இடம் பெற்றார். 

தினேஷ் கார்த்திக் என்றால் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது 2018இல் வங்கதேசத்திற்கு எதிரான nidahas trophy இறுதிப் போட்டி தான். கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் தனி ஆளாக சிக்சர்களாக விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இந்திய அணிக்காக 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 686 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்கு மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடர்களிலும் சிறப்பாக பங்களிப்பை வழங்கியுள்ளார்.  2008ஆம் ஆண்டு முதல் 2024 வரை அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஐபிஎல் தொடர்களில் டெல்லி, பஞ்சாப், மும்பை, குஜராத், கொல்கத்தா, பெங்களூரு என ஆறு அணிகளுக்காக களமிறங்கியுள்ளார். ஆனால் தனது சொந்த மாநிலமான சென்னை அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பது தனக்கு வருத்தமளிப்பதாக சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், இந்த வருடம் ஃபினிஷராக 330 ரன்கள் எடுத்துள்ளார். 

39 வயதாகும் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகவும் இருந்துள்ளார்.  தினேஷ் கார்த்திக்கிற்கு மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது போல் இந்திய அணியில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை.  டி20 கிரிக்கெட்டில் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக பார்க்கப்படும் தினேஷ் கார்த்திக் நேற்றைய போட்டியில் தோல்வியுடன் தனது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்கிற்கு ஆர்சிபி வீரர்கள் ராஜ மரியாதை அளித்து வழியனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் விளையாடிய 15 போட்டிகளில் 13 இன்னிங்ஸ் விளையாடி 326 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 2 முறை அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like