1. Home
  2. தமிழ்நாடு

திண்டுக்கல் சீனிவாசன் அப்பல்லோவில் அனுமதி!

1

முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏற்கனவே ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டிருந்த அவர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கழுத்தில் கட்டி ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். திடீரென திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like