திண்டுக்கல் டி.ஐ.ஜி., வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்..!

திண்டுக்கல் டி.ஐ.ஜி.,யாக அண்மையில் நியமிக்கப்பட்டவர் வந்திதா பாண்டே.
இவரது கணவர் வருண்குமாரும் (இவர் திருச்சி எஸ்.பி.யாக இருந்தவர். அண்மையில் அதே திருச்சி டி.ஐ.ஜி.,யாக பணி உயர்த்தப்பட்டார்).
இருவரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளால் இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர்கள். அதன் காரணமாக நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட, அதற்கு சீமான் கண்டனம் தெரிவித்ததால் விவகாரம் பெரிதாக மாறியது.
இந்நிலையில் திண்டுக்கல் டி.ஐ.ஜி., வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
மத்திய அரசு பணிக்கு, மாற்றப்பட்டு உள்ள வந்திதா பாண்டே, இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக பணி அமர்த்தப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இயக்குநராக அவர் அந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.