1. Home
  2. தமிழ்நாடு

அநாகரீகமாக செய்தி வெளியிட்டது குறித்து தினமலர் விளக்கம்..!

1

1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளியிலேயே காலை உணவு வழங்கப்படுவதை அடுத்து பள்ளியில் வந்து சாப்பிட பெற்றோர்களுக்கு அறிவுறுத்திய ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கழிப்பறையை பயன்படுத்துவது உள்ளிட்ட அடிப்படை சுகாதார அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை “காலை உணவு திட்டம்… மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு… ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது” என்று அநாகரீகமா தலைப்பிட்டு குழந்தைகளையும் தமிழக அரசின் திட்டத்தையும் ஒரு சேர விமர்சித்துள்ளதுடன், உணவுடன் மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வியில் மண் அள்ளிப் போடும் நோக்கத்தில் தினமலரில் செய்தி வெளியிட்டிருப்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் காலை உணவு திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய செய்தி தினமலரில் இன்று வெளியான நிலையில் அதற்கு தினமலர் விளக்கம் அளித்துள்ளது.  

திரு சத்தியமூர்த்தி என்பவரை ஆசிரியராகக் கொண்ட ஈரோடு மற்றும் சேலம் ஆகிய இரண்டு பதிப்புகளில் மட்டும் தான்  குறிப்பிட்ட அந்த செய்தி வெளியாகியுள்ளது என்றும் மற்ற பதிப்புகளில் அந்த செய்தி வெளியாகவில்லை என்றும் தினமலர் விளக்கம் அடைந்துள்ளது.

கி ராமசுப்பு என்பவர் ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை, கோவை, மதுரை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்புகளில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகவில்லை என்றும் தினமலர் விளக்கம் அளித்துள்ளது.  

மேலும் திரு R. சத்தியமூர்த்தி கடந்த  23 வருடங்களாக இந்த இரண்டு பதிப்புகளையும் தனியாக நடத்தி வருகிறார். இருப்பினும்  "தினமலர்" பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக் கூடிய செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்றும் தினமலரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like