1. Home
  2. தமிழ்நாடு

பயங்கர விபத்து – தினபூமி பத்திரிகை உரிமையாளர் உயிரிழப்பு..!

1

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் உள்ள தடுப்பூச்சுவரில் மோதி, கண்டெய்னரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த தினபூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் காரில் பயணித்த அவரது மகன் ரமேஷ் படுகாயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயமடைந்த ரமேஷை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். 

Trending News

Latest News

You May Like