1. Home
  2. தமிழ்நாடு

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முழுமையாக உடல் நலம்பெற வேண்டும்.. மு.க.ஸ்டாலின் விருப்பம்.. !

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முழுமையாக உடல் நலம்பெற வேண்டும்.. மு.க.ஸ்டாலின் விருப்பம்.. !


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்ததால் சென்னையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2ஆவது எம்எல்ஏ பழனி ஆவார். 

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக எம்எல்ஏ விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என விரும்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

newstm.in 

Trending News

Latest News

You May Like